CNN செய்தியாளர் வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதி ரத்து!

Report

வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிப்பதற்காக CNN செய்தியாளரின் பத்திரிகையாளருக்கான அனுமதி அட்டை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க இடைத் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது நேற்று (புதன்கிழமை) ட்ரம்ப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் செய்தியாளரின் பத்திரிகையாளருக்கான அனுமதி அட்டை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அப்போது, அப்போது சிஎன்என் செய்தியாளர் அகோஸ்டா, லத்தீன் அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம் ட்ரம்ப் கேள்வியை இடைமறித்தார்.

பின்னர், சிஎன்என் நிருபர் ஜிம் ஒகஸ்ரோவை நோக்கி, நீங்கள் நாகரிகமற்ற, பயங்கரமான ஒருவர் என்று ட்ரம்ப் கடும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

ட்ரம்பின் இக்கருத்திற்கு எதிர்க் கருத்தைத் தெரிவிக்க எத்தணித்த நிருபர் ஜிம் ஒகஸ்ரோவின் கைகளிலிருந்து அவருடைய ஒலிவாங்கியை வெள்ளை மாளிகையின் ஊடக செயற்பாட்டாளர் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியுள்ளார்.

மத்திய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் இடப்பெயர்வில் அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற முடிவு பற்றியும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா மேற்கொண்ட கொள்கைகள் தொடர்பாகவும் CNN ஊடகம் செய்தி வெளியிட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நியாயமற்ற முறையில், நடுநிலையன்றி விதமாக மக்களுக்கு குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

952 total views