குடிபோதையில் மோசமான செயல் செய்த குண்டு காதலி! காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

Report

அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண் ஒருவர் மதுபோதையில் தனது காதலன் மீது ஏறி உட்கார்ந்ததால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விண்டி தாமஸ் என்ற 130 எடை கொண்ட குண்டுப் பெண் ஒருவர் கீயோ பட்லர் என்பவரை சமீப காலமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தும்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பட்லரை கீழே தள்ளிய தாமஸ் அவர் மீது ஏறி உட்கார்ந்தார்.

கீழே தனது காதலன் மூச்சு விட சிரமப்படுவதை அறியாத தாமஸ், தொடர்ந்து அவர் மீது அமர்ந்துள்ளார். இதில் கீயோ பட்லர் பரிதாபமாக மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதன் தீர்ப்பு வரும் 21 ந் தேதி வெளியாக இருக்கிறது.

இதில், குற்றவாளியாக விண்டி உறுதி செய்யப்படும் பட்சத்தில் சுமார் 18-லிருந்து 36 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4698 total views