இலங்கைப் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்க பெண்

Report

இலங்கைப் பெண் ஒருவரை அடிமையாக நடத்தியமைக்காக, அமெரிக்காவின் நியுஜேர்சியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அமெரிக்கப் பெண், 2009ம் ஆண்டு இலங்கையில் இருந்து பெண் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்து, அன்று முதல் தமது வீட்டில் அடிமையாக நடத்தி வந்துள்ளார்.

அத்துடன் அவரை சமபால் திருமணத்துக்கும் வற்புறுத்தி, அதன் ஊடாக வீட்டு வேலைகளை சம்பளம் இன்றி செய்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நியுஜேர்சி சட்ட மா அதிபர் ஊடாக கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலவந்தப்படுத்தி வேலை வாங்கியமை, வெளிநாட்டவர் ஒருவரை மறைத்து வைத்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக குறித்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 வருடங்கள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

17176 total views