அமெரிக்காவில் பணியாற்றுவதற்கா ஹெச்-1பி விசா விதிமுறைகளில் எளிமை: டிரம்ப் உறுதி!

Report

வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) குறித்த விதிமுறைகளை எளிமையாக்குவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

இது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு சாதகமான அறிவிப்பு என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,,,

ஹெச்-1பி விசா தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று, அந்த விசா மூலம் அமெரிக்கா வந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மேலும், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு, அவர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான பாதைக்கும் அவர்களை இட்டுச் செல்லும் வகையிலான மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்றார்.

3213 total views