800,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை திருடிய நபர் கைது!

Report

பிரிட்டிஷ் கொலம்பியாவில், 800,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான ஆரோன் ஜேம்ஸ் யங் என்ற குறித்த நபர், கார்ன்வால் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து திருடிய குற்றத்திற்கான கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பிணையில் விடுதலையான குறித்த நபர், குடியிருப்பு மற்றும் மூன்று வணிக சேமிப்பு பெட்டங்கள் என நான்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் மீது தற்போது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபரிடம் இருந்து ஆடம்பர கைப்பைகள், ஆடை, காலணிகள், கடிகாரங்கள், மதுபான போத்தல்கள், வாசனை திரவியங்கள், தனிப்பட்ட மின்னணுவியல், நகைகள், இசைக்கருவிகள், மின் கருவிகள், விளையாட்டு பொருட்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

1093 total views