அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்!

Report

வருகிற 2020-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்ஸி கப்பார்டு என்பவர் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை, இவர் வெள்ளிக்கிழமை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வெளியிடப்படும்.

மேலும், போர் மற்றும் அமைதி தான் எனது முக்கிய நோக்கங்களாகும். அது தொடர்பாகவே எனது பிரசாரங்களும் அமையும் என்றார்.

இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து மற்றும் அமெரிக்க சமோவன் வம்சாவளி ஆகியவற்ற தனது பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1585 total views