அமெரிக்காவில் 1,431 விமானங்கள் ரத்து!

Report

அமெரிக்காவை அச்சுறுத்திய கடும் பனிப்புயல் காரணமாக 1,431 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த பனிப்புயலானது, அமெரிக்க ராகிஸ் மற்றும் சமவெளிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) 1,609 கி.மீ வேகத்தில் தாக்கியது.

இதன் காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த பனிப்புயல் காரணமாக வீதிகளை சுமார் 3 மீட்டர் அளவில் பனிக்கட்டிகள் சூழந்திருந்தது.

அத்துடன், 1,431 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், 12,465 விமான சேவை தாமதமாக புறப்பட்டு சென்றதாகவும் அந்நாட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வீதிகளை மூடியுள்ள பனிகளை அகற்றும் பணிகள் துரித வேளைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

8422 total views