உணவின்றி தவிக்கும் அமெரிக்க ஊழியர்கள்

Report

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள அரசு நிர்வாக முடக்கத்தால், உணவின்றி தவிக்கும் அமெரிக்கா ஊழியர்களுக்கு அமெரிக்கா வாழ் சீக்கிய மக்கள் உதவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, $500 கோடி நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை.

இதனால், ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால், அரசு நிர்வாகம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

4-வது வாரத்தை எட்டும் அரசு முடக்கத்தால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை. சம்பளமின்றி அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரங்க்குக்கு மத்தியில் ஊதியம் இன்றி உணவுக்கு தவித்து வரும் மக்களுக்கு, அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் உணவு அளித்து உதவி வருவதாக தகவல்கள் தெரவிக்கின்றன.

சீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருதுவாராவில் அரசு ஊழியர்களின் குடும்பத்தார் வந்து உணவு உட்கொண்டு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சீக்கிய மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 11ம் தேதி இலவச உணவளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அங்குள்ள சீக்கியர் மையத்தில் அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சுடச்சுட சைவ உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

8061 total views