அமெரிக்காவில் கடும் பனிப்புயல் -1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

Report

அமெரிக்காவின் சில மாகாணங்களில் கடும் பனிப்புயல் காரணமாக, வாகனப் போக்குவரத்து முடங்கியதுடன் 1,300-க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் விடுத்துள்ள அறிக்கையில், கொலராடோ, வையோமிங், நெப்ராஸ்கா, வடக்கு டகோடா மற்றும் தெற்கு டகோடா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

வானியல் வல்லுநர்களால் ‘பாம் சைக்ளோன்’ என அழைக்கப்படும் இந்த பனிப்புயல் காரணமாக, கடுமையான காற்றுடன் பனிப் பொழிவும் அதிக அளவில் காணப்படுகிறது.

இதன் காரணமாக,பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனி படர்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து முடங்கி உள்ளது. சுமார் 1,100 வாகனங்கள் பாதி வழியில் தவிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

டென்வர் உட்பட பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 1,339 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்புயல் காரணமாக, 125 விபத்துகள் ஏற்பட்டதாகவும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் டென்வர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1313 total views