அமெரிக்காவில் ஆசியப் பெண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு?

Report

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை, இந்திய வம்சாவளி பெண்ணான லில்லி சிங் என்பவர் தொகுத்து வழங்கவுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும், லில்லி சிங்(30) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர்.

சிறந்த காமெடி நடிகரான இவர், டொரெண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு ‘மோனிகர் சூப்பர் உமென்’ எனும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். இந்த சேனலை 14 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்பிஎஸ் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் ஒரு உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

குறித்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் இந்த உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது இதுவே முதன்முறையாகும்.

இது குறித்து கருத்து தெர்வித்துள்ள லில்லி சிங், இந்த குழுமத்துடன் இணைவதை மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆசியாகவும் கருதுகிறேன். இதற்காக என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதற்கிடையில் லில்லி கடந்த 2017ம் ஆண்டிற்கான விருப்பமான யூடியூப் நட்சத்திரம் எனும் புகழ்பெற்ற பீப்பிள் சாய்ஸ் விருதினை பெற்றுள்ளார்.

மேலும் இவர் ஐஸ் ஏஜ்:கொலீசன் கோர்ஸ் மற்றும் பேட் மோம்ஸ் எனும் திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4060 total views