அமெரிக்க பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில், 6 குழந்தைகள்! நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்

Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகளை பெற்றுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் குறித்த தெல்மா சியாகா என்ற கர்ப்பிணி பெண்.இவர் டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சியாகாவுக்கு அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர்.

சுமார் 9 மணி நேர இடைவெளியில் பிறந்த இந்த குழந்தைகள், 500 கிராம் முதல் 1000 கிராம் வரை எடையுடன் நலமாக உள்ளன.

குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர்.

பெண் இரட்டையர்களுக்கு ஜீனா மற்றும் ஜுரியல் என்று அவர்களது தாயான தெல்மா சியாகா பெயரிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் உலகின் சுமார் 470 கோடி பேரில் ஒருவருக்கு தான் இந்த அதிசயம் நிகழ வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

14891 total views