அமெரிக்காவில் சூறாவளி – 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

Report

அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியதுடன் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது.

இதனால் குறித்த 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

மற்றும் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதுடன் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன. மேலும் சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதனால் 3 மாகாணங்களிலும் சுமார் 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

சூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் சூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ;மிச்சிபிசி மாகாணத்தில் சூறாவளியை தொடர்ந்து அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

527 total views