அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – நியூயோர்க் நகர முதலவர் அறிவிப்பு

Report

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக நியூயோர்க் நகர முதலவர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பினை இன்று காணொளி ஒன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான நேரம் இது என்றும் ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளை இதன்மூலம் நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தான் நியூயோர்க் பகுதியைச் சேர்ந்தவன் என்றும், ட்ரம்பை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் அவர் இந்தவார இறுதியில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு அயோவா மற்றும் தென் கரோலினா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு சவால் விடுக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமீபத்தில் 20 பேர் வேட்பாளர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் நியூயோர்க் நகர முதலவர் பதவிக்காக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் சார்பான வேட்பாளர்களில் 58 வயதுடைய பில் டி பிளேசியோ முதன் முறையாக 2013 இல் நகர முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1111 total views