அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய கடற்படை விமானம்!

Report

அமெரிக்காவில் ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அமெரிக்க கடற்படை விமானம், ஏ.வி-8 பி ஹாரியர். இந்த விமானம், அங்கு வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

அவர் நியூபெர்ன் நகரில் உள்ள கரோலினா கிழக்கு மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகிறது. இருப்பினும், விபத்துக்கான காரணம், உடனடியாக தெரிய வரவில்லை.

2167 total views