அமெரிக்காவை அச்சுறுத்திய கடும் சூறாவளி...

Report

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தை தாக்கிய சூறாவளியில் சிக்கி சுமார் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோசமான வானிலை இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநில தலைநகர் ஜெஃபர்சனிலிருந்து 270 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நகரிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மிசூரி தலைநகரை கடும் மழையுடன் சூறாவளி தாக்கியது. இதில் சிக்கி பலர் காயமடைந்ததுடன், இதனால் மாநிலம் முழுவதும் பாரிய சேதங்களும் பதிவாகின.

மிசூரி மாநிலத்தை மாத்திரமன்றி ஒக்லஹோமா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களையும் புயல் காற்று தாக்கியது.

சூறாவளியினால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன், மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால், ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

4230 total views