சாதிக் கானால் லண்டனுக்கு பேரழிவு - டிரம்ப் எச்சரிக்கை!

Report

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 24 மணித்தியாலங்களில் சில இடங்களில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் காரணமாக மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைச்சமவங்கள் தொடர்பில் 14 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனுக்கு புதிய மேயர் தேவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிக விரைவில் லண்டனுக்கு புதிய மேயர் தேவை என்றும், சாதிக் கானால் லண்டனுக்கு பேரழிவு எனவும் , இப்படியே போனால் நிலை மிக மோசமாகிவிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

834 total views