ஓடுபாதையில் இருந்து விமானம் தடம் மாறி சென்றதால் பரபரப்பு!

Report

அமெரிக்காவி விமான ஓடுபாதையில் இருந்து விமானம் தடம் மாறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நெவார்க் ((Newark)) விமான நிலையத்திற்கு வந்த யுனைடெட் ஏர்லைன்சின் விமானம், தரையிறங்கிய போது ஓடுபாதையிலிருந்து தடம் மாறி சென்றது.

இதில் விமானத்தின் இடதுபக்கத்தில் இருந்த தரையிறங்குவதற்கான முக்கிய கியர்((gear)) புல்தரையில் சிக்கியதால் விமானம் ஓருபாதையில் இருந்து விலகிச்சென்றுள்ளது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த 166 பயணிகள் வெளியேற்றப்பட்டு, அதன்பின்னர் விமானம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

எனினும் இதன்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் நெவார்க் விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவதும, புறப்படுவதும் சில மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

697 total views