ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் குறித்து டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

Report

அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதோடு பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என்றும் செய்தியாளர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடற்படை மாலுமிகள் வானில் பார்த்தது என்ன என்பது குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டும் விளக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

1026 total views