அமெரிக்காவில் சாலையில் பொழிந்த பண மழையில் நனைந்த மக்கள் - வைரல் காணொளி!

Report

அமெரிக்காவில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பணம் சிதறி மக்கள் அதை அளிச்சென்று தற்போது, பொலிஸார் அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் சாலையில் இருந்து அள்ளிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.ஆம், ஆஷ்ஃபோர்ட் டன்வுட்டி நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிச் சென்ற லாரியின் கதவு திடீரென திறந்ததால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நோட்டுக்கள் சிதறின.

இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி, சிதறிய பணத்தை எடுத்துச் சென்றனர்.

ஆனால், இப்போது பொலிஸார் பணம் சாலையில் கிடந்தால் எடுக்கதான் தோணும் ஆனாலும் இது திருட்டுக்கு சமம் என்பதால் நேர்மையோடு எடுத்த பணத்தௌ திருப்பித் தருங்கள். எங்களிம் எடுக்கப்பட்ட பணத்தின் சீரியல் எண்கள் உள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

4086 total views