கிட்னிக்கு இதயத்தில் ஓர் ஸ்பெஷல் இடமுண்டு - அதிபர் ட்ரம்ப் சொன்ன கருத்து இணையத்தில் படுவைரல்

Report

அமெரிக்க அரசு கிட்னி என்று சொல்லப்படும் சிறுநீரகத்துக்கென்று வரும் நோய்களை சரி செய்ய பல சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சொன்ன பல கருத்துகள் (அனைத்து கருத்துகளும் கூட), சர்சையாகும்

அப்படி அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கிட்னிக்கு இதயத்தில் ஓர் ஸ்பெஷல் இடமுண்டு என்றார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ட்ரம்ப், சில விஷயங்களுக்காக நீங்கள் அதிகம் மெனக்கெடுவீர்கள். கிட்னிக்காக அதிகம் உழைப்பீர்கள். அது மிகவும் ஸ்பெஷலானது. கிட்னிக்கு இதயத்தில் ஒரு ஸ்பெஷல் இடமுண்டு என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளார் ட்ரம்ப்.

இதைப் பார்த்த, இணையவாசிகள், ட்ரம்பை ட்ரோல் செய்ய அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் ட்ரம்பை கேலி செய்யும் வகையில், கிட்னிக்கு இதயத்தில் இடமில்லை ட்ரம்ப் அது உங்களுக்குத் தெரியாதா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

701 total views