அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி செயற்பட்ட ஜிப்ரால்டர்-அடுத்து என்ன நடக்கும்?

Report

அனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக கூறி இரானிய எண்ணெய் கப்பலை கடந்த ஒரு மாதமாக ஜிப்ரால்டர் தடுத்து வைத்திருந்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி குறித்த கப்பலை ஜிப்ரால்டர் விடுதலை செய்துள்ளது .

எனினும் அந்த இரானிய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிட்டிருந்தது.

எனினும் ஜிப்ரால்டர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அக்கப்பலைக் கைப்பற்ற அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் உத்தரவுக்கு பிரிட்டன் மாற்று ஜிப்ரால்டர் அதிகாரிகள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை.

கிரேஸ்-1 எனப்படும் இரான் எண்ணெய் கப்பல் ஜூலைமாதம் 4 ஆம் திகதியன்று பிரிட்டன் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு அமெரிக்காவின் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கும் என ஜிப்ரால்டரின் முதல்வர் ஃபெபியன் பிகார்டோ கூறியுள்ளார்.

எனினும் குறித்த கப்பல் வியாழக்கிழமை வரை ஜிப்ரால்டரில் இருந்த நிலையில் அது 180 டிகிரி வரை நகர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த கப்பல் கடல் அலையினால் திரும்பியதா இல்லை அங்கிருந்து செல்ல தயார்படுத்தி கொண்டதா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

1335 total views