ரைஸ் குக்கர்களால் மிரண்டுபோன அமெரிக்கா!

Report

அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் சந்தேகத்திற்கிடமான 3 பொருட்களால் நேற்று காலை இரண்டு மணி நேரம் அச்சத்துடன் காணப்பட்டது.

உலக வர்த்தக மையத்திற்கு அருகிலுள்ள ஃபுல்டன் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை நிலையத்தில் ரைஸ் குக்கர் ஒன்று கைவிடப்பட்டதை கண்ட பயணி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், அதே நிலையத்தின் மற்றொரு பகுதியில் இரண்டாவது ரைஸ் குக்கர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக இரண்டு சுரங்கப்பாதை பாதைகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு ஃபுல்டன் தெருவுக்கு சேவை செய்யும் ரயில்கள் பிற பாதைகளில் நிலையத்தை கடந்து சென்றன.

சந்தேகத்திற்கிடமான இரண்டு ரைஸ் குக்கர்களையும் பரிசோதிதத்த பொலிசார் குறித்த பொருட்கள் பாதிப்பில்லாதவை என அறிவித்தார்கள்.

இதேவேளை மூன்றாவதாகவும் சந்தேகத்திற்குரிய ரைஸ் குக்கர் ஒன்று செல்சியா மாவட்டத்தில் 16 வது தெருவில் வடக்கே குப்பைகளுடன் கண்டறியப்பட்டது.

செல்சியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரஷர் குக்கரில் வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை ஃபுல்டன் ஸ்ட்ரீட் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ரைஸ் குக்கர்களையும் ஒரே மனிதர் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

தற்பொழுது குறித்த நபரை அதிகாரிகள் தேடிவருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

4305 total views