அமெரிக்காவில் மகிழ்ச்சி தகவல் : ஒரே நேரத்தில் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்!

Report

அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கர்ப்பமான நர்சுகள் 9 பேருக்கும் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.

இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு “எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.

இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த நர்சுகள் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக ‘லைக்’குகளை குவித்து வருகிறது.

1678 total views