28 அடி நீள அனகொண்டாவிடம் மாட்டிய 6 அடி நீள முதலை - வைரல் புகைப்படம்

Report

பிரேசிலில் 28 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பிடம் சிக்கிய முதலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அமேசான் மழைக்காடுகளின் நீர்பிடிப்புப் பகுதியான பண்டானல் ((Pantanal)) சதுப்பு நிலப்பகுதியில் 6 அடி நீளமுள்ள கெய்மன் வகை முதலை ஒன்று நீந்திச் சென்றது.

இதன்போது நீருக்கடியில் பதுங்கியிருந்த 28 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு திடீரெனப் பாய்ந்து முதலையைச் சுற்றி வளைத்தது.

ஆனாலும் திமிறிய முதலை, பாம்பின் தலையை தனது வாயால் கடித்தபோதும், முதலையின் கடியை விட பாம்பின் பிடி வலிமையாக இருந்ததால் அடுத்த சில மணித்துளிகளில் கெய்மன் முதலை பரிதாபமாக உயிரிழந்தது.

5629 total views