அமெரிக்காவில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிய காருக்குள் உறங்கிய ஓட்டுனர்! வைரல் வீடியோ!

Report

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் நெடுஞ்சாலையில் சென்ற டெல்சா வாடகை காரில் ஓட்டுனர் மற்றும் காரில் பயணித்த வாடிக்கையாளர் இருவருமே ஆழ்ந்து தூங்கிய அதிர்ச்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்த டகோடா ராண்டல் ((Dakota Randall)) என்பவர் இச்சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும் போது, கார் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் , தமது காரில் இருந்து ஒலிஎழுப்பியும் அவர்களை எழுப்ப முடியவில்லை என்றும், கிடைத்த ஒரு நிமிட வாய்ப்பில் குறித்த வீடியோவை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

டிவிட்டரில் வெளியான உடனேயே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனைக் பார்வையுற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கார் என்ன ஆனது என்பது தெரியவராத நிலையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

1318 total views