கிரான்ட் கன்யோன் பள்ளத்தாக்கில் பிரித்தானியர் உயிரிழப்பு!

Report

அமெரிக்காவின் கிரான்ட் கன்யோன் பள்ளத்தாக்கிற்கு அருகே வான் சாகசம் (skydiving) செய்த பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

பயிற்றுவிப்பாளருடன் இணைந்து சாகசத்தில் ஈடுபட்ட 55 வயதான கிறிஸ்ரோஃபர் ஸ்வேல்ஸ் (Christopher Swales) என்பவரே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

பயிற்றுவிப்பாளரும், கிறிஸ்ரோபரும் தறையிறங்கும்போது வான்குடை மிதவை (Parachute) சரியாக விரியாததால் இருவரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தரையில் பலமாக விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பயிற்றுவிப்பாளர் உயிர்தப்பிய நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்வேல்ஸ் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

398 total views