கடல் வேட்டையாடிகளால் தாக்கப்பட்ட பச்சை ஆமை!

Report

அமெரிக்காவில் கழுத்தில் பாய்ந்த 3 அடி நீளமுள்ள ஈட்டியுடன் உயிருக்குப் போராடிய கடலாமை மீட்கப்பட்டுள்ளது.

புளோரிடா கடல் பகுதியில் உள்ள கேரிஸ்போர்ட் பாறைப் (Carysfort Reef) பகுதியில் இந்த பச்சை ஆமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் வேட்டையாடிகளால் இந்த ஆமை தாக்கப்பட்டிருக்கக் கூடும் என உலகளாவிய வன உயிரின நிதிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆமையைப் பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் அதனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆமைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து படுகாயமடைந்த பச்சை ஆமைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு ஈட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதன் காரணமாக, ஆமை வேகமாக தேறி வருவதாகவும், விரைவில் பிடிபட்ட இடத்தில் விடுவிக்கப்படும் என வனஉயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

485 total views