இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று பிறந்த அபூர்வ குழந்தை!

Report

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று பிறந்த அபூர்வ குழந்தை தொடர்பில் தகவல் வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத விட்டு பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக நாடுகளை உலுக்கியது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி குறித்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

அந்த நாளில் டென்னிசி மாகாணம், ஜெர்மன்டவுன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் ஆகும். 9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பேசப்படுகிறது.

இதுதொடர்பில் கேமட்ரியோன் மூர் பிரவுன் தெரிவிக்கையில், பேரழிவு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் எனது மகள் புதிய வாழ்வாக அமைந்திருக்கிறாள் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த குழந்தைக்கு பெற்றோர் கிறிஸ்டினா என பெயர் சூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

1620 total views