அமெரிக்காவில் ஆழ்ந்த உறக்கத்தில் இளம் பெண் செய்த செயல்!

Report

அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயதான ஜீனா என்பவர், ஆழ்ந்த தூக்கத்தின் கனவில், தனது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கி உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஜீனாக்கு சில தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு வழக்கம் போல் தூங்கியபோது சற்று மோசமாக கனவு கண்டதாகவும் அதில் கெட்டவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தன்னுடைய காதலன் மோதிரத்தை விழுங்கும் படி கூறியதாகவும் அப்போது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியது போன்றும் கனவு கண்டுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலை எழுந்த போது, அவருடைய கையில் மோதிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உண்மையிலே மோதிரத்தை விழுங்கிவிட்டோம் என்பதை உணர்ந்து அதனை வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு முதலில் சிரித்த அவர்கள் அதன் பின் உடனடியாக ஜீனாவை வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு வைத்தியர்கள் எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது ஜீனாவின் மோதிரம் அவரின் குடலில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து எண்டோஸ்கோப்பி மூலம் எடுத்துவிடலாம், எந்த பிரச்சனையும் இல்லை என கூறிய வைத்தியர்கள் ஜீனாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், என நினைத்து கையெழுத்து வாங்கியபோது ஜீனா அழுதுவிட்டார்.

இதையடுத்து ஜீனாவின் குடலில் இருந்து அவரின் நிச்சயதார்த்த மோதிரம் நல்ல முறையில் வெளியில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மோதிரத்தை நான் முதலில் என்னுடைய காதலன் மற்றும் வருங்கால கணவர் பாபியிடம் கேட்டேன், முதலில் இல்லை என்றார், அதன் பின் அவர் கொடுத்தார். இதை நான் மீண்டும் விழுங்கமாட்டேன் என்றும் ஜீனா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமுடன் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ஜினா விழுங்கிய மோதிரம், வைர மோதிரம் ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

8468 total views