அமெரிக்காவில் வெடித்து சிதறிய கட்டிடம்! அங்கிருந்தவர்கள் நிலை என்ன?

Report

மனவளர்ச்சி குன்றியவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் வெடித்து சிதறியது

அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றியவர்கள் தங்கியிருந்த விடுதியில், விஷவாயு கசிந்து கட்டிடம் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் மையின் மாநிலத்துக்கு உட்பட்ட Farmington நகரில், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ‘LEAP’ என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

இந்த மையத்தில் தங்கி பலர் பயிற்சி பெற்று வந்த நிலையில், நேற்று இந்த மையத்தில் விஷவாயு கசிந்துள்ளது. இதனை கண்டறிந்த மையத்தை சேர்ந்த சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி, அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் கட்டிடத்திலிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி, கசிவு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திடீரென கட்டிடம் வெடித்து சிதறி, தரைமட்டமானது. இந்த விபத்தில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், 6 பேர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். பனி படர்ந்தது போல் காட்சியளிக்கும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், விஷவாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

3649 total views