வட கொரிய அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தவர்..ஆய்வாளர்களின் அதிர வைக்கும் ஆதாரங்கள்!

Report

தமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள இன ஒற்றுமையும் உறவு முறையும் தெரியுமா. அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செம்பவளம் ராணி கொரிய நாட்டு இளவரசி. இவர் பாண்டிய நாட்டிலிருந்து கி.பி 48ல் கொரிய நாட்டிற்கு கப்பலில் வந்தார். சுரா கயா கொரிய மன்னர் முதல் வழி அரசர்.

ராணிக்கும் இந்த ராஜாவுக்கு கப்பலில் இருந்து வந்து இறங்கி திருமணம் செய்து கொள்வது போல கனவும் தோன்றியது. அதன்படியே ராணியும் அவரும் திருமணம் செய்து கொண்டனர்.

'இந்த தமிழச்சியை கொரியர்கள் கடவுளாக வணங்குகின்றனர். செம்பவளம் என்ற பெயரை கொரிய மொழியில் ஃகியோ ஃகுவாங் ஓக் என்று பெயரிட்டு அழைத்தனர்.

கொரியாவை 140 ஆண்டு கியோ குவாங் ஓக் ஆண்டுள்ளார். கொரிய மன்னனை மணந்து, கராக் வம்சத்தையும் செம்பவள ராணி துவக்கி வைத்துள்ளார்.

இது கொரியர்களின் பைபிள் என்று அழைக்கப்படுகின்றது. மேலும், அரசி கியோ குவாங் ஓக்கை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

கொரியாவில் அதிகார வர்க்கமாக இருக்கும் கிம் இனத்தவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தாய் வழி உறவாக இந்தியாவில் வந்துள்ளதாக சம்குக் யூசாவின் நூல் மூலம் தெரிய வந்துள்ளதை அடுத்து உறுதி படுத்துகின்றனர்.

அந்த நூலில் அயுக்தா என்ற இடத்தில் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியில் இருந்து வந்திருக்காலம் என்று தவறாக எண்ணி அயோத்தியில் கடந்த 2001ம் ஆண்டு நினைவு மண்டபத்தையும் கட்டினர் கொரியர்கள்.

சிவப்பு பாய் மர கப்பலில் ராணி தனது சகோதரன் மற்றும் 22 பேருடன் பாய் யூசான் நருக்கு வந்துள்ளார். 72 நாட்களில் அயுக்தாவில் இருந்து கொரியாவை அடைந்தாக அந்த நூலில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அயோத்தியில் இருந்து அப்படி செல்ல முடியாது என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

வட மாநில மன்னர்கள் யாரும் சமுத்திரத்தை தாண்டுவது கிடையாது. அதை பாவம் என்று எண்ணுகின்றனர். ஆய்நாடு இன்று மதுரை பக்கத்தில் இருக்கின்றது. சரியாக குறிப்பிட்டால், ஆயக்குடி எனலாம். குமரி கடற்கரை பகுதியை சேர்ந்தது.

பெரும் கடற்படை சாம்ராஜ்ஜியத்தை வைத்திருந்தவர்கள் சோழர்கள். பல்வேறு நாடுகளையும் ஆண்டுள்ளனர்.

முத்துக்களை பாண்டியர்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்தனர். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டது போல, கொரிய நாட்டு மூவேந்தர்கள் ஆண்டுள்ளனர்.

தமிழகத்தை போலவே கொரியாவிலும், அதே பெயரில் குறிஞ்சி முல்லை, மருதம் தெய்தல், பாலை நிலங்களையும் அழைக்கின்றனர். சென்னையில் கொரிய துணை தூதர் கிம் தமிழ்ச் சொற்கள் 4000 க்கு மேல் கொரியாவில் உள்ளதாகக் கூறுகிறார்.

வீடு கட்டுவது பாத்திரங்கள், உரல், உலக்கை போன்றவை இரு நாடுகளிலும் உள்ளன. வேளாண்மை, பானை செய்தல்,மணிகள் , துணிகள் , ஆமைப் படகுகள், பழமையான தொழிற்சாலைகள், பண்பாடுகள் வியக்கத்தக்க ஒற்றுமைகளுடன் உள்ளதாக இரு நாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

24222 total views