பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள ஒபாமா – மிஷேல் தம்பதியினர்

Report

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பெராக் ஒபாமாவும், மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரிற்கு செல்லவுள்ளனர்.

அங்கு இடம்பெறும் சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்களுடன் தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா சிங்கப்பூரில் இடம்பெறும் வர்த்தகப் பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக பங்கேற்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்த போது தான் பெற்ற அனுபவம், தலைமைத்துவம் குறித்த தமது சிந்தனைகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்துகொள்வார் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்ச்சி டிசம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் EXPO வில் காலை முதல் மதியம் வரை நடைபெ​றவுள்ளது.

இதன்போது, சிங்கப்பூர் அரசியல் தலைவர்களுடன் உயர்நிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மிஷேல் ஒபாமாவும் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக விளங்கிய அனுபவத்தை அவர் எடுத்துரைப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மிஷேல் ஒபாமாவின் நிகழ்ச்சி டிசம்பர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் EXPOவில் இரவு இடம்பெறவுள்ளது.

இதேவேளை குறித்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள கட்டணம் அறவிடப்படும் என ஏற்பாட்டு நிறுவனமான The Growth Faculty தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

909 total views