அமெரிக்காவில் பூசணிக்காயை தூக்கியெறியும் போட்டி!

Report

இலக்கை குறிவைத்து பூசணிக்காயை தூக்கியெறியும் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் ஆண்டுதோறும் இலக்கை குறி பார்த்து பூசணிக்காயை எறியும் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியை சேரந்த 36 அணிகள் கலந்துக் கொண்டன. 91 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறி வைத்து பூசணிக்காயை எறிவது தான் போட்டியின் நோக்கம்.

இந்த போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் பூசணிக்காய்களை வைத்து எறியும் பளுதூக்கிகளை தாங்களாகவே தயாரித்து எடுத்துவர வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. அதேபோல், போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படும்.

அதனை பயன்படுத்திக் கொண்டு எந்த அணி இலக்கை சரியாக குறி வைத்து பூசணிக்காய்களை எறிகின்றதோ அந்த அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் மாணவர்கள் தங்கள் பெற்றொர்களுடன் வந்து ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.

980 total views