அமெரிக்கா மீது ஈரான் கடும் விமர்சனம்!

Report

எங்கள் மீது தடை விதித்து மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களை அமெரிக்கா செய்கிறது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக விமர்சித்தார்.

உலக சுகாதார அமைப்பின் 66-வது பிராந்திய அமர்வில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி உரையாற்றினார். அதில் ஹசன் பேசும்போது, எந்த ஒரு காரணமும் இல்லாமல் சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்து வருகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும், சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

3266 total views