பாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர்... எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலம் மீட்பு!

Report

அமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர், இரண்டு வாரங்களுக்கு பின்னர் எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை நியூயார்க் நகர மேன்ஹோல் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஒன்றில் ஒரு நபரின் சிதைந்து போன சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவருடைய உடலின் சில பகுதிகளை எலிகள் கடித்து குதறியிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.

அதில், 41 வயதான கேப்ரியல் சீசர் என்கிற நபர் செப்டம்பர் 30 ம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் பாதாள சாக்கடையை சுற்றிலும் தடுமாறியபடியே உள்ளே விழுந்துள்ளார்.

ஆனால் அவருடைய முகவரி மற்ற தகவல்கள் எதுவும் கண்டறியபடவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளர்கள் சரியாக கவனிக்காமல் அதனை மூடிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் திறந்த போது தான் உள்ளே ஒரு நபர் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, மாநில பொது சேவை ஆணையம் கூறியுள்ளது.

1790 total views