தரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்

Report

அமெரிக்காவில் ஓடும் பாதையில் இருந்து விலகி விமானம் ஒன்று ஆற்றின் விளிம்பிற்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தில் இருந்து உனாலஸ்கா தீவில் உள்ள டச்சு ஹார்பருக்கு ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது.

விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 39 பயணிகள் இருந்தனர். விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஓடு பாதையையும் தாண்டி அருகில் உள்ள ஆற்றின் கரைக்கு போய் முட்டி நின்றது.

அதிர்ஷ்டவசமாக ஆற்றுக்குள் முழுவதுமாக இறங்கவில்லை. விமானம் ஆற்றுக்குள் முட்டியதும் அதில் இருந்த பயணிகள் அலறினர். இதனையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் விமானத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2696 total views