தென்கொரியா 4.7 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும்- டிரம்ப் வலியுறுத்து

Report

தென் கொரியாவின் சியோலில் அமைந்துள்ள அமெரிக்காவின் காவல்படையினர் மற்றும் அவர்களுக்கான ஆயுதங்களுக்காக தென்கொரிய அரசு 4 . 7 பில்லியன் டாலர் தொகையை செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் சியோலில் அமெரிக்கா வழங்கியுள்ள பாதுகாப்புக்கான செலவுகளை தென் ஆப்பிரிக்காவே ஏற்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது சியோல் உள்ளிட்ட தென்கொரியாவின் பகுதிகளில் 25 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது படைகள் இருக்கும் நாடுகள் பாதுகாப்புக்கான செலவை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை இத்தகைய கட்டணங்களை செலுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

1094 total views