அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்!

Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நிதிமோசடி செய்த குற்றச்சாட்டிற்காக 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது அந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த விசாரணையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், டிரம்ப்பிற்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1813 total views