புளோரிடாவில் வாகனம் மோதி உயிருக்கு போராடிய கரடி குட்டி!

Report

அமெரிக்காவில், வாகனம் மோதி சாலையில் உயிருக்கு போராடிய கரடி குட்டியை, சில கரடிகள் புதர் பகுதிக்கு பாதுகாப்பாக இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

புளோரிடா மாநிலத்தின் வெஸ்ட் மெயின் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையை கரடி குட்டி ஒன்று கடக்க முயன்றது.

அப்போது, அந்த கரடி குட்டி மீது கார் மோதியது. இதில் கரடி குட்டி படுகாயமுற்றதை புதர் மறைவிலிருந்து பார்த்த 3 கரடிகள், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, ஓடி வந்து, குட்டியை புதர் பகுதிக்கு இழுத்து செல்ல முயன்றன.

கரடிகளின் நெஞ்சை உருக்கும் இந்த செயலை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கரடி குட்டி சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் வரை காத்திருந்தபின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்து பெண் ஒருவர் வெளியிட்டிருந்த நிலையில், காயமடைந்த குட்டி உயிரிழந்து விட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1024 total views