அமெரிக்கா வானில் தோன்றிய பிரமிட்

Report

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரில் நேற்று இரவு வானத்தில் ஆரஞ்சு நிற ஒளியுடன் பிரமிட் போன்ற உருவம் தோன்றியுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அதை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து யுடியூப் ஆராச்சியாளர் ஒருவர் கூறுகையில், ‘இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வு என்றும், வெனிசியா என்ற பெண்ணால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வானில் முக்கோண வடிவ உருவம் ஒன்று தோன்றியுள்ளதாக காட்டுகிறது. ஆரஞ்சு நிற ஒளியுடன் இருக்கும் அந்த உருவம், நெருப்பிற்குள் இருப்பது போன்று தெரிகிறதாகவும்,

அதை உற்று நோக்கினால் அதன் பின்பு ஒரு சாயல் இருப்பது போன்று தெரிகின்ரபோதும் அதும், வினோத நிறங்களில் உள்ள மேகமாக இருக்கலாம் என்றும், எனினும் உறுதியாக வானத்தில் பிரமிடு இருப்பது போன்றே தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

யுடியூப் வாடிக்கையாளர்கள் சிலர் அதை எரியும் பிரமிடு எனவும், தீப்பிழம்பை உமிழ்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பல பார்வையாளர்கள் இந்த உருவத்தை பிரபலமற்ற டிஆர் -3 பி உளவு விமானத்துடன் ஒப்பிட்டனர். டி.ஆர் -3 பி உளவு விமானம், அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் என கூறப்படுகின்ற நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

5186 total views