விரைவில் டிரம்ப் இந்தியாவிற்கு விஜயம்

Report

விரைவில் இந்தியாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த நட்பு இருப்பதாகவும் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு சிறந்த நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமக்கு மிகச்சிறந்த நண்பர் என்றும் இந்தியாவுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் விளக்கம் அளித்தார்.

அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடன் நடத்திய சந்திப்பை நினைவுபடுத்திய டிரம்ப், இந்த உறவு இருநாடுகளின் கனவுகளுக்கும் புதிய வடிவம் கொடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான பிரச்சினைகள் கடந்த ஜூன் மாதம் உருவாகிய நிலையில் பாதாம் மற்றும் ஆப்பிள் போன்ற 28 பொருட்கள் மீது இந்தியா வரி விதித்ததையடுத்து இந்தியாவின் சிறப்பு வர்த்தக அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது.

இந்நிலையில் இருநாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் சரிசெய்யப்பட்டு மீண்டும் அமெரிக்காவும் இந்தியாவும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

1081 total views