அமெரிக்காவில் கொடூர சம்பவம் : பள்ளியில் துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி!

Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்திற்கு உள்பட்ட சான்டா கிலாடிட்டா என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இன்று காலை மாணவர்கள் வழக்கம்போல தங்கள் வகுப்பில் கல்வி பயின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்குவந்த மர்ம நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அருகில் உள்ள பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3809 total views