அமெரிக்காவில் பிறந்து சீனா செல்லும் பெய்பெய் பாண்டா!

Report

வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் பிறந்த பெய்பெய் எனும் பாண்டா, நாளை சீனா செல்ல விருக்கிறது.

கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவுக்கு சீனா இரண்டு பாண்டாக்களை பரிசளித்தது.

2015ஆம் ஆண்டு இவை ஈன்ற குட்டி பாண்டா ‘பெய் பெய்’எனும் பெயரில் வாஷிங்டன் தேசிய மிருகக்காட்சி சாலையில் வளர்ந்து வருகிறது.

நான்கு வயதாகும்போது குட்டியை ஒப்படைக்க வேண்டுமென்ற ஒப்பந்தப்படி பெய்பெய் நாளை சீனா செல்லவிருக்கிறது.

விமானத்தில் பாண்டாவின் உடல் நலத்தை சோதிப்பதற்காக ஒரு கால்நடை மருத்துவரும் ஒரு பராமரிப்பாளரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதோடு அதற்குப் பிடித்தமான மூங்கில், ஆப்பிள், பேரிக்காய், கேரட், பிஸ்கட் போன்ற உணவுகளும் பெருமளவில் விமானத்தில் ஏற்றப்படவிருக்கின்றன.

257 total views