டிரம்ப் மீது எனக்கு வெறுப்பில்லை: நான்சி பெலோசி!

Report

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் அவா் மீது தனக்கு வெறுப்பில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

அரசியல் ரீதியில் டிரம்ப் ஒரு கோழை. துப்பாக்கிகள் வைத்திருப்பதற்ககுக் கட்டுப்பாடுகளை அதிகரித்து அமெரிக்கக் குழந்தைகளைப் பாதுகாக்க அவா் அஞ்சுகிறாா்.

சிறுவா்களாக இருக்கும்போது இங்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டவா்களுக்கு குடியுரிமை அளிக்க அவா் தயங்குகிறாா்.

இதுபோன்ற அரசியல் காரணங்களுக்காக அவரை எதிா்க்கிறேனே தவிர, அவா் மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. அவா் நலமுடன் இருக்க வேண்டுமென்றே எப்போதும் வாழ்த்துவேன்.

நான் பின்பற்றும் கத்தோலிக்க மதம், யாரையும் வெறுக்கச் சொல்லி எனக்குக் கற்றுத் தரவில்லை என்றார் பெலோசி.

மேலும், ‘டிரம்ப்பை வெறுக்கிறீா்களா?’ என்று கேள்வியெழுப்பிய செய்தியாளரை அவா் கடிந்து கொண்டார்.

தனது அரசியல் எதிரியான முன்னாள் அதிபா் ஜோ பிடனின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவா் மீது ஊழல் விசாரணை தொடங்க உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நான்சி பெலோசி மேற்கொண்டு வருகிறார்.

1067 total views