அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள்.....வியப்பில் பொது மக்கள்!

Report

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நகரமான லாஸ்வேகாஸை சுற்றி தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸின் டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் சில புறாக்கள் பறந்தன. பின்னர் சிறிது நேரம் தரையில் நடமாடின. அப்போது, அவற்றின் தலையில் வித்தியாசமாக ஏதோ காணப்பட்டது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புறாக்களின் அருகில் சென்று உற்று கவனித்தனர். அப்போது புறாக்களின் தலையில் சிறிய சிவப்பு நிற தொப்பிகள் காணப்பட்டன. அதை பார்த்தால் கௌபாய் தொப்பி போல காணப்பட்டுள்ளது.

இதை ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள் அதை காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றினர்.

இதுகுறித்து பேசிய புறாக்கள் மீட்பு ஆர்வலர் ஒருவர், புறாக்களின் தலையில் தொப்பி எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என தெரியவில்லை.

ஒருவேளை பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் அப்போது அவை துன்புறுத்தப்பட்டிருக்க கூடும். இந்த வேலையே செய்தது யாராக இருக்கும் என விசாரித்து வருகிறோம் என்றார்.

மேலும், இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் அவற்றின் தொப்பிகளே அவை வேட்டையாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட கூடும் என கவலை தெரிவித்தார்.

3591 total views