பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் கொலை செய்யப்பட்டும் பெண்கள்! தொடர்ச்சியாக கடத்தப்படுவது எப்படி?

Report

அமெரிக்காவில் பெண்கள் வெள்ளை வான்களில் கடத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

வெள்ளை வான்களில் வரும் மர்ம நபர்கள் பெண்களை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவர்களை கொலை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொலை செய்ததன் பின்னர், அவர்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்த தகவல்கள் கடந்த சில தினங்களாகவே அமெரிக்காவில் பேஸ்புக் பக்கங்களில் வேகமாக பரப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ முறைப்பாடுகளும் தங்களுக்கு இது வரையில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பேஸ்புக்கில் வலம் வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

1265 total views