அமெரிக்க எச்சரிக்கையை மீறிய வடகொரியா! மீண்டும் கிளப்பிய புதிய சர்சை

Report

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இன்று வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் கூறப்பட்டதாவது, வடகொரியா மீண்டும் முக்கியமான அணுசக்தி சோதனையை நடத்தியுள்ளது.

வடகொரியாவில் பாதுகாப்பாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, வடகொரியா ராக்கெட் ஏவுதள சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அது முதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

1881 total views