அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

Report

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரில் வெள்ளிக்கிழைமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் கைதானவர் கொல்லப்பட்ட குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அனைவரும் தொடர்புடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர் தொடர்பிலும் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

1554 total views