டிரம்ப்புக்கு எதிரான பேரணியில் குவிந்த பெண்கள்

Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் ட்ரம்ப் வெற்றிபெற்று இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் நிலைப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளதாகப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை குறைவான பெண்களே பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2017 இல், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, நாடு முழுவதும் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1440 total views