அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி – ஐவர் காயம்

Report

அமெரிக்க டெக்சாஸ் மாநில நகரான, சான் அன்டோனியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக, டெகாசாஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு குழுவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர், வில்லியம் மெக்மனஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் வேறு பெரிய காரணங்கள் எதுவும் தொடர்புடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2121 total views